Tuesday, 17 June 2014

(vacuum tube)

வெற்றிடக் குழாய்(vacuum tube)

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை

 


ஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய ஒலிப்பதிவுக் கருவி, போனாட்டோகிராப் எனப்படும் கருவியாகும். இதற்கான உரிமம் 1857 ஆம் ஆண்டில் எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி என்பவருக்கு வழங்கப்பட்டது. இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. 1878 ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராப் என்னும் கருவியொன்றுக்கு உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான உருளைகளே சிலகாலம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தன. 1887 ல், எமில் பெர்லினர் என்பவர் தட்டைப் பயன்படுத்தும் போனோகிராப் ஒன்றை உருவாக்கினார்.
மின்னணு இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு லீ டி பாரெஸ்ட் என்பவர் உருவாக்கிய மும்முனைய ஆடியன் (audion) ஆகும். 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவே முதலாவது வெற்றிடக் குழாய் ஆகும். இவ்வெற்றிடக் குழாய்களே மின் சமிக்ஞைகளைப் மிகைப்படுத்தல், வானொலி ஒலிபரப்பு, கணிப்பொறி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதற்கான கருவிகளை உருவாக்கப் பயன்பட்டன.

 மின்னணுவியலில், வெற்றிடக் குழாய் அல்லது மின்னணுக் குழாய் என்பது ஒரு மூடப்பட்ட குழாயில் உள்ள வெற்றிடத்தின் மீது பரவும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாகும். அந்தக் குழாய் பெரும்பாலும் மெல்லிய கண்ணாடியால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். நீண்ட உருளை வடிவில் காணப்படும். வெண்சுடாநிலை மின்விளக்கைப் போன்றுள்ள ஒரு இருமுனையத்தை எளிமையான வெற்றிட குழாய் எனச் சொல்லலாம்.

No comments:

Post a Comment